டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

சீன நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்: சீனாவுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளது. இதற்கு மாற்று திட்டம் வைத்துள்ளோம். டிக்டாக் செயலிக்கு பதில் வேறு செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வருவது பற்றி யோசித்து வருகிறோம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =