சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் விதைகள் வழங்கும் விழா

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் உள்ள சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில் இலவச பயிற்சி மற்றும் அடித்தள புதிய கண்டுபிடிப்பு விதைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் குஜராத் தேசிய கண்டுபிடிப்பிற்கான அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய விதை ரகங்கள் சாகுபடிக்கான நடைபெற்ற இலவச பயிற்சி மற்றும் அடித்தள புதிய கண்டுபிடிப்பு விதைகள் வழங்கும் விழாவிற்கு வேளாண் அறிவியல் மையத் தலைவர் பெ.பச்சைமால் தலைமை வகித்தார்.

முது நிலை விஞ்ஞானி அ.திருமுருகன் முன்னிலை வகித்தார். கிராமப்புற விவசாயிகள் கண்டுபிடித்த பாரம்பரிய ரக விதைகளான பெல்லாரி (சோனா 40) மற்றும் கத்திரி (ஹெச் ஜெட்கேபி-1) விதைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி அதன் சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றி தோடடக்கலை தொழல்நுட்ப வல்லுநர் கோ.இராஜராம்பயிற்சி அளித்தார். வேளாண் தொழில் நுட்ப வல்லுநர்கள் மகேஸ்வரன், ரம்யாசிவசெல்வி, சுமிதா, அருண்ராஜ் மற்றும் அறிவியல் நிர்வாக உதவியாளர் வே.தனலட்சுமி ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விழாவில் பங்கேற்ற விவசாயிகளை கனிவுடன் உபசரித்தனர்.

பயிற்சியின் இறுதியில் தேனி மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் (சின்னமனூர், கம்பம், தேனி, உத்தமபாளையம், ஆண்டிபட்டி) ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 50 விவசாயிகளுக்கு ரூபாய் 90,000 மதிப்புள்ள பெல்லாரி (சோனா40) மற்றும் கத்திரி (ஹெட்ச்கேபி1) விதைகள் இலவமாக வழங்கப்பட்டன. இதில் வேளாண் தொழில் நுட்ப வல்லுநர் ரம்யா சிவசெல்வி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − 17 =