கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்

கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்திய கறுப்பர் கூட்டத்தை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பாக சுவர்களில் வேல் ஓவியம் வரைந்து வீரவேல் வெற்றிவேல் என்ற வாசக ஸ்டிக்கர் ஒட்டியும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் முருகப் பெருமானின் கந்த சஷ்டி பாடல் தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தது. இவற்றை கண்டித்தும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாஜக விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக 100க்கும் மேற்பட்ட வீடுகளில் “வெற்றிவேல்-வீரவேல்” வாசக ஸ்டிக்கர்களை ஒட்டியும் கந்தசஷ்டி புத்தகங்களை வழங்கியும் 100க்கும் மேற்பட்ட வீட்டு வாசல்களில் வேல் ஓவியம் வரைந்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 3