உ.பி.,யில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் உயர்வு

லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான அபராதம் தற்போது இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


உத்தரபிரதேசத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து, மற்ற பல்வேறு நலன்சார்ந்த பணிகளிலும் அரசு மற்றும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால், ஊரடங்கு காலங்களில் விதிகளை மீறி மக்கள் வெளியே செல்கின்றனர். இதனால் வாகன நெருக்கடி மட்டுமின்றி நோய் தொற்றும் உயர வாய்ப்பு உள்ளது. ஊரடங்கு காலங்களில் தற்போது பல தரப்பினரும் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து போலீசார் பல முறை அறிவித்து வருகின்றனர். தற்போது போக்குவரத்து விதிமீறலீல் ஈடுபடுவோருக்கு அபராதம் உயர்த்தப்பட்டதாக போக்குவரத்து செயலாளர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில், உத்தரப்பிரதேசத்தில் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் இல்லாமல் சென்றாலோ அல்லது சீல் பெல்ட் இல்லாமல் நான்கு சக்கர வாகனத்தில் சென்றாலோ, அவர்களுக்கான அபராதம் இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.500 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு அலுவர்கள் / பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அபராதம் ரூ,1000 ல் இருந்து ரூ,2000 ஆகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் விதிமீறலுக்கு ரூ1000 ஆகவும், இரண்டாவது முறையாக ரூ,2000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தீயணைப்பு படை மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களுக்கு வழி விடாமல் இடையூறு செய்தால் ரூ,10,000 அபராதம் விதிக்கப்படும்.

வாகனத்திற்கான காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால், முதல் முறையாக 2000 ஆகவும், இரண்டாம் முறையாக 4000 ஆகவும் உயர்த்தப்பட்டது. செல்லலுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் / 14 வயதிற்கு குறைவானவர்களுக்கு 5000 அபராதமாகவும், அதிவேகமாக சென்றால் ரூ 2000 அபராதம் விதிக்கப்படும். நோ பார்க்கிங்கில் வாகனம் நிறுத்தினால் அபராதம் 1500 எனவும், போலி ஆவணங்கள் / விதிமீறலில் ஈடுபட்டால் ரூ,1 லட்சம் வரையாகவும் விதிக்கப்படும். இவ்வாறு கூறினார். நேற்று முன்தினம் இந்த அறிவிப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவுகள் செயல்படுத்தப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + = 19