புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய முதல்வர் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக பூவதி பொறுப்பேற்றுள்ளார்.

ஏற்கனவே புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த மீனாட்சிசுந்தரத்திற்கு பதிலாக புதிய முதல்வாக தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியாற்றிய பூவதி புதுக்கோட்டை முதல்வராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவர் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தற்போதைய கொரோனா காலத்தில் ஏற்கனவே பணியாற்றிய தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை மிகுந்த கட்டுக்குள் வைத்திருந்ததில் பூவதிக்கு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பூவதிக்கு சக மருத்துவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 + = 54