பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடை: உச்ச நீதிமன்றம்

பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ய உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பி.எஸ்.4 ரக வாகனங்களை விட பி.எஸ்.6 ரக வாகனங்கள் குறைவான மாசுவை ஏற்படுத்தும் என்றும், பி.எஸ்.6 வாகனப் புகையில் புற்றுநோயை ஏற்படுத்து நச்சுப் பொருள் 80 சதவிகிதம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பி.எஸ்.6 வாகன சட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதனால் மக்கள் பி.எஸ்.6 ரக வாகனங்களை வாங்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு பின்னர் பி.எஸ்.4 ரக வாகனங்களை உற்பத்தி செய்யவோ விற்கவோ கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, வாகன விற்பனையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று 10 நாட்களுக்கு கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஒரு லட்சம் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என அனுமதி வழங்கிய நிலையில், 2.55 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வாகன விற்பனையில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் வழங்கிய அனுமதியை விட அதிகமாக வாகனங்களை விற்றது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல, என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை பி.எஸ்.4 ரக வாகனங்களை பதிவு செய்ய தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

48 − 44 =