தேவாரம் பற்றி அவதூறு: சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் : மாநகர காவல் ஆணையரிடம் புகார்

தேவாரம் பற்றி தவறாக பேசிய சுந்தரவள்ளி என்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகர காவல் ஆணையரிடம் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் வேதம் என்பது திருமுறைகள். இந்த திருமுறைகளை நாள்தோறும் இறைவன் முன் ஓதுவாமூர்த்திகள் பாடப்பட்டு வருவது வழக்கம். இப்படி பெருமை கொண்ட தேவாரத்தைப் பற்றியும், திருஞானசம்பந்தர் பற்றியும் சுந்தரவள்ளி என்பவர் யூடியூப் சேனலில் வெளியான ஒரு விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவரது கருத்துக்கள் கடவுள் நம்பிக்கை உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்தும் அதோடு மட்டுமின்றி உணர்ச்சிவசப்படும் இறை உணர்வாளர்களை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தோடும் பேசி வருவது புரிகிறது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து செய்தியாளரும் பேசிய சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாவட்ட செய்தி தொடர்பாளர் அருண்குமார், சுந்தரவள்ளி மீது கடும் நடவடிக்கை எடுத்து சமூக அமைதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில பொதுச்செயலாளர் துரை, மாநகர மாவட்ட செயலாளர் மணி கொங்கு மண்டல தலைவர் பொட்டு ரமேஷ், ஆலய பாதுகாப்பு செயலாளர் இந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 6 =