புதுகைவரலாறு செய்தி எதிரொலி ஒருவேளை உணவுக்கே வழியின்றி தவித்த மாற்றுத்திறனாளி குடும்பத் தினருக்கு அன்பு அறக்கட்டளை உதவி

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூரை அடுத்த ஆழவார் குளம் பகுதியில், மகேந்திரன் கனகவல்லி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகன் அஜித் பிறவியிலேயே மாற்றுத்திறனாளி என்பதால், மகனை கவனித்துக்கொள்ளவே ஒரு ஆள் எப்போதும் கூடவே இருக்கும் நிலை இருக்கிறது. கணவர் முடங்கிவிட்ட நிலையில், வேலைக்கு சென்றுவந்தால் மட்டுமே அன்றாடம் சாப்பிட முடியும் என்பதால் கனகவல்லியும் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வறுமையில் தவித்து வருகிறார்.

கொரோனா தொற்று ஊரடங்கு காலமும் அவர்களை நிம்மதியாக தூங்கவிடவில்லை. எப்படியாவது அரை வயிற்றையாவது நிறைக்க முடியுமா என்று கலங்கி நின்ற அந்த குடும்பத்தின் நிலை குறித்து, நமது புதுகை வரலாறு நாளிதழில் பதிவு செய்திருந்தோம். அந்த செய்தியை படித்த மயிலாடுதுறை அன்பு அறக்கட்டளை நிறுவனத்தலைவரும் பத்திரிகையாளருமான கொ.அன்புகுமார் உடனடியாக சம்மந்தப்பட்ட குடும்பத்திற்கு ஒருமாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியிருக்கிறார்.

மேலும் அவர்களது மருத்துவ செலவுக்கான சிறிய தொகையும் அன்பு அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வறுமையை போக்க நிரந்தமாக ஏதேனும் ஒரு தொழிலை ஏற்படுத்தி தர அன்பு அறக்கட்டளை நிச்சயமாக முயற்சிக்கும் என்றும் அன்பு அறக்கட்டளையின் நிறுவனத்தலைவர் கொ.அன்புகுமார் உறுதியளித்திருக்கிறார்.

இவர்களின் நிலை குறித்த செய்தி வெளியிட்ட புதுகை வரலாறு நாளிதழுக்கும், மாவட்ட நிருபர் யோகுதாஸ்க்கும் நன்றி கூறினார். மேலும் அஜித்தின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க புதுகை வரலாறு நாளிதழுக்கும், அன்பு அறக்கட்டளைக்கும் நன்றி கூறினர். இந்த செய்தி அறிந்த அந்த பகுதி மக்கள் புதுகை வரலாறு நாளிதழுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =