டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டியின் 135வது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெற்றது

புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இந்தியாவின் முதல் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 153வது பிறந்தநாள் விழா, திலகவதியார் திருவருள் ஆதீன வளாகத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் வீரப்பன், சிவாஜி, கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் ஆதீனகர்த்தர் தவத்திரு. தயானந்த சந்திரசேகர சுவாமிகள் சிறப்பு விருந்தினராகவும், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பஷீர் முகமது கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுரேஷ் ராஜன், கால்நடை மருத்துவர் பிரபு, புண்ணியமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் என்கிற மாத்திரைகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் ஜெய் பார்த்தீபன், டாக்டர். பிரபாகரதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் கோபிநாத் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 5