ஆலங்குடி அருகே 5,500- லிட்டர் பேரலில் உள்ள எரிச்சாரய ஊரல் அழிப்பு

ஆலங்குடி அருகே வனப்பகுதியில் 5,500 லிட்டர் பேரலில் உள்ள எரிச்சாரய ஊரல்களை பதுக்கி வைக்கப்படிருந்ததை கண்டுபிடித்து போலீசார் அதிரடியாக கைப்பற்றி நேற்று அழித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு சட்டவிரோதமாக விற்பனைக்காக காய்ச்சி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை, மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு காவல் நிலையத்திற்குட்பட்ட கருக்காகுறிச்சி தெற்கு கிராம வனப்பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய் ச்சபடுவதாக வடகாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் வடகாடு காவல் ஆய்வாளர் பரத்ஸ்ரீநிவாஸ் தலைமையிலான போலீசார் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கருக்காகுறிச்சி தெற்கு கிராமத்தில் உள்ள வனப்பகுதி மற்றும் வாழைத்தோட்டம், முந்திரி ஆகிய பல்வேறு இடங்களில் பானைகள் மற்றும் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கள்ளச்சாராய ஊரல்கள் கண்டறியப்பட்டது.

இதனை கைப்பற்றிய போலீசார் அதில் 5,500 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கருக்காகுறிச்சி, வானக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் வடகாடு காவல்துறை ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 31 = 33