ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான நேர்முக தேர்வு

ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி, அமராவதி புதூரில் இறுதியாண்டு பயின்ற மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வு 6.07.2020 அன்று ஆன்லைன் மூலம் நடைபெற்றது.

சென்னை, திருவள்ளூரில் அமைந்துள்ள ஜப்பான் நிறுவனம் MITSUBA SICAL INDIA Private Limited மற்றும் செங்கல்பட்டில் அமைந்துள்ள COMSTAR AUTOMOTIVE Technologies என்ற அமெரிக்க நிறுவனமும் இந்த நேர்முகத்தேர்வை நடத்தினார்கள்.

இதில் கலந்து கொண்ட 100 மாணவர்களில் 75 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் 35 மாணவிகளும் அடங்கும். இதில் மெக்கானிக்கல், கம்பியூட்டர் சயின்ஸ், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையைச் சேர்ந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதில் 15 மாணவர்கள் 15.07.2020 அன்று “COMSTAR AUTOMOTIVE Technologies “ என்ற நிறுவனத்தில் பணியில் சேர்ந்துள்ளார்கள். MITSUBA SICAL INDIA Private Limited நிறுவனத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 60 மாணவர்களில் 35 மாணவர்கள் 28.07.2020 அன்று பணியில் சேரவிருப்பதால் இன்று கல்லூரியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மேலும், 25 மாணவர்கள் 01.08.2020 பணியில் சேர இருக்கிறார்கள். இந்த இரண்டு நிறுவனங்களும் வருடா, வருடம் 100 மாணவர்களை பணிக்கு எடுத்துக் கொள்வதாக ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன என்று பொன்வாசன் (முதல்வர் பொறுப்பு) தெரிவித்தார்.

LAYAM MANAGEMENT SOLUTIONS பொது மேலாளர் ரவி இந்த நிறுவனங்களுக்கு தேவையான மாணவர்களை பணியமர்த்துவதர்க்கான ஆன்லைன் எழுத்து தேர்வு நடத்தி வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்வு பெற்றவர்களுக்கான பணி ஆணையினை கல்லூரிக்கு அனுப்பிவைத்தார்.

பணியில் சேரவிருக்கிற மாணவர்களுக்கு கல்லூரியின் ஆலோசகரும், அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சுப்பையா வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் ஆகியோரும் மாணவர்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 1