நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்குப் பதிவு

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சென்று ஏரியில் மீன் பிடித்த நடிகர்கள் விமல், சூரி மீது கொடைக்கானல் போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 17ந்தேதி நடிகர்கள் விமல், சூரி மற்றும் சிலர் கொடைக்கானல் சென்று நட்சத்திர ஏரி அருகில் உள்ள ஒரு பங்களாவில் தங்கியுள்ளனர்.அந்த பங்களா முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. பின்னர் அந்த அரசியல் பிரமுகருக்கு வேண்டப்பட்ட உள்ளூர் நபர்களின் உதவியோடு, பேரிஜம் வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

கொடைக்கானல் நகரில் இருந்து 27 கி.மீ., தொலைவில் பாதுகாக்கப்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் பேரிஜம் ஏரி அமைந்துள்ளது. அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி சமைத்து சாப்பிட்டு, உலகின் நன்னீர் ஏரிகளுள் ஒன்றான பேரிஜம் ஏரியில் மீன் பிடித்து மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதையடுத்து உரிய அனுமதியின்றி, நடிகர்களை அங்கு அழைத்து சென்ற வேட்டைத்தடுப்பு காவலர்கள் சைமன் பிரபு(25), செல்வம்(24) ஆகியோரை, மாவட்ட வன அலுவலர் தேஜஸ்வி பணியிடை நீக்கம் செய்தார்.

இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானல் வந்ததாகவும், ஊரடங்கு நேரத்தில் நோய்த்தொற்றை பரப்பும் விதத்தில் நடந்து கொண்டதாகவும், 2 பிரிவுகளில் நடிகர்கள் விமல், சூரி ஆகியோர் மீது, தற்போது கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

86 − = 77