திண்டுக்கல் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டமானது 3ம் தேதி வரை கோரிக்கை பேட்ச் அணிந்து பேராடபோவதாக பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் இன்று முதல் வரும் ஆகஸ்டு மூன்றாம் தேதி வரை கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கோரிக்கை விளக்க பேட்ச் அணிந்து டாஸ்மாக் பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 165 டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பணியில் உள்ள அலுவலர்கள் என அனைவரும் பணிக்கு எந்த இடையூறும் இன்றி பணி செய்து கொண்டே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,

நோய் தொற்றால் உயிரிழந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும், பணியாளர்களின் குடும்பத்தினர் மருத்துவ செலவு முழுவதையும் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 + = 78