கம்பத்தில் போலீஸ் தன்னார்வலர் களுக்கு கோவிட் 19 சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கல்

தேனி மாவட்டம் கம்பத்தில் கோவிட் 19 கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸார் மற்றும் தன்னார்வலர்களுக்கு சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் நினைவுப் பரிசு விருதுகள் வழங்கினார்.

கம்பம் மியூசிக் ஸ்டார் மற்றும் வின்னர் விளையாட்டு கழகம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு உத்தமபாளையம் டி.எஸ்.பி.சின்னக்கண்ணு தலைமை வகித்தார். கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக ஆர்வலர்களுக்கும், போலீஸாருக்கும் கோவிட்&19 நினைவுப் பரிசை சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மியூசிக் ஸ்டார் சேனல் உரிமையாளர் செந்தில்நாதன், வின்னர் விளையாட்டுக் கழகம் நிறுவனர் அ.அலீம், சமூக ஆர்வலர்கள் கிருஷ்ணகுமார், தனபால், நேதாஜி அறக்கட்டளை நிறுவனர் சோ.பஞ்சுராஜா உள்பட தன்னார்வலர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 88 = 98