பழனி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அறநிலை துறை சார்பாக மனு

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் நடைபெறக்கூடிய நிறுவனங்களில் தினக்கூலிகளாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று சிறப்பு நிதி இதுவரை வழங்கப்படவில்லை. உடனடியாக அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு அறநிலை துறை சார்பாக கொரோனா தொற்று சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று சார் ஆட்சியர் அசோகனிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதில், சார் ஆட்சியர் அசோகன், திருக்கோயிலின் உதவி ஆணையர் செந்தில்குமார், வட்டாட்சியர் பழனிச்சாமி, நகர காவல் உதவி ஆய்வாளர் ரஞ்சித்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர மன்ற தலைவர் ராஜமாணிக்கம், நகர பொறுப்பாளர்கள் கந்தசாமி முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் வருவாய்த்துறை அதிகாரிகளும், கட்சி பொறுப்பாளர்களும் திருக்கோயில் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

39 + = 44