டிக்டாக்கை தொடர்ந்து மேலும் 275 சீன செயலிகளுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக 275 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதற்கான ஆலோசனையை தற்போது மத்திய அரசு முன் எடுத்துள்ளது. தற்போது 275 செயலிகள் இந்தியாவின் விதிமுறைகளை மீறும் வகையில் உள்ளதா? என்ற அடிப்படையில் தற்போது ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மிக பிரபலமாக பேசப்படும் பப்ஜி விளையாட்டு மற்றும் ஜியோமி, அலி எக்ஸ்பிரஸ், ஸில்லி உள்ளிட்ட நிறுவனங்களின் செயலிகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே, மத்திய தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில், 275 செயலிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன. எந்த வித தரவுகளை செயலிகள் பெறுகின்றன என்பது குறித்து மத்திய அரசால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த செயலிகள் இந்திய அரசின் விதிகளுக்கு மீறும் பச்சத்தில் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், முன்னதாக தடை விதிக்கப்பட்ட 59 சீன செயலிகளில் திருத்தம் செய்யப்பட்டால் மீண்டும் இந்தியாவில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.