புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இளையோருக்கான சிறப்பு விருது வழங்கல்

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு இளையோர்களிடம் கல்வி மற்றும் விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக “இளையோருக்கான பாராட்டு விருது” வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சங்கத் தலைவரும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியருமான மருத்துவர் க. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. ரோட்டரி பிரார்த்தனையை சங்கச் செயலாளர் ப.செல்லத்துரை வாசித்தார்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் சங்கத் தலைவர் வரவேற்று பேசும்போது ரோட்டரி சங்கங்களில் உறுப்பினராக உள்ள நாம் முதலில் சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் ரோட்டரியின் நான்கு வழி சோதனையான இது உண்மையா? இது சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நியாயம் அளிக்குமா? இது நல்லெண்ணத்தையும், நட்புறவையும் வளர்க்குமா? இது சம்மந்தப்பட்ட அனைவருக்கும் நன்மை பயக்குமா? என்ற கோட்பாட்டை (வாய்ப்பாடு) கடைப்பிடிப்போம் என்று கூறி மேலும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு நாம், நமது குடும்பத்தினரை கொரோனாவில் இருந்து பாதுகாப்பது நமது தலையாய கடமை ஆகும். அதனால் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிவோம், கையுறை அணிவோம், சமூக இடைவெளியை கடைபிடிப்போம்.

இந்நிகழ்ச்சியில் மேனாள் துணை ஆளுநர் மாருதி கண.மோகன்ராஜ், விளையாட்டு துறை ஆசிரியர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான (எஸ்ஜிஎப்ஐ) பளுதூக்கும் போட்டியில் தமிழ்நாட்டின் சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி மாணவி பிரியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளதை பாராட்டி டாக்டர் க.ஆறுமுகம் நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்ச்சி காணொளி (ஜூம்) மூலம் நடத்தப்பட்ட நிகழ்வில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன் நிறைவாக பொருளாளர் ஜபருல்லா நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

93 − 83 =