மதுரையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு

மதுரை மாவட்டத்தில் இன்று மேலும் 320 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,077 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் இன்று நள்ளிரவு வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சியில் மேலும் 2 நாட்களுக்கு முழு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 14.07.2020 நள்ளிரவு 12.00 மணி முடிய முழு ஊரடங்கு நீட்டிப்படுகிறது. மேலும் 14ந்தேதிக்கு பிறகு 31ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 13 =