தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு காரணமாக கோவையில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா பரவலை தடுக்க அரசு அறிவித்த முழு ஊரடங்கினால் கோவையில் ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை, 1​​00 அடி சாலை, உக்கடம், டவுன் ஹால் ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. அவினாசி சாலையில் உள்ள் அவினாசி மேம்பாலம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. மாநகரில் தேவையின்றி வாகனங்களில் வெளியே வரும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 2