இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 28,637 பேருக்கு தொற்று உறுதி

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,49,553-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 28,637 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 22,674 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 551 உயிரிழந்துள்ளனர். இதுவரை 5,34,621 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24மணி நேரத்தில் 19,235 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,46,600 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,116 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,36,985 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,34,226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,898 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 85,915 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,10,921 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,334 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 87,692 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 13 = 15