சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நாடெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் விதமாக அரசு அறிவுறுத்தலின்படி அரசியல் கட்சிகளும், தன்னார்வத் தொண்டர்களும், சமூக அமைப்புகளும் தங்களால் முடிந்தவரை உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள மருதுபாண்டியர் நினைவு தூண்ணிற்க்கு மாலையிட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஆர்.பெரிய கருப்பன் இந்த கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் மாமன்னர் மருதுபாண்டியர் வாரிசு தலைவர் ராமசாமி, ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, வட்டாட்சியர் ஜெயலட்சுமி, உதய சண்முகம், பூக்கடை பாண்டியன், பூக்கடை செல்வம், நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாமன்னர் மருதுபாண்டியர் மற்றும் இளைஞர் பேரவை உள்ளிட்ட சமூக அமைப்புகளும் ஏற்பாடு செய்திருந்தனர்.