திருச்சியில் திமுக சார்பில் நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா

திருச்சி திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில், திமுகவின் மூத்த முன்னோடி நூற்றாண்டு விழா காணும் நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த நாளை யொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகி வீரன் அழகுமுத்துக்கோன் அவருடைய குருபூஜை தினத்தை யொட்டி அவரது திருஉருவபடத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கழக செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட கழக பொருளாளர் கோவிந்தராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், நகர கழக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 2 =