சிவகங்கை: அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவு பற்றிய ஆலோசனைக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள விருந்தினர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு சம்மந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், பாம்கோ சேர்மன் ஏ.வி. நாகராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் வரும் காலங்களில் இணையதள வழியாக அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைப்பது குறித்தும், அதிமுக அரசின் கொள்கை செயல்பாடுகளை மக்களிடம் நேரடியாகச் செல்ல வழிவகை செய்வதை குறித்தும், எதிர்க்கட்சிகளின் தவறான செயல்பாடுகளை மக்களுக்குத் உடனுக்குடன் தெளிவாக எடுத்துரைப்பதை குறித்தும் பேசினார்.

மேலும் அதற்காக 18 வயதிலிருந்து 31 வயது வரை அரசியல் ஆர்வம் உள்ள இளைஞர்களை பேரூராட்சி, ஒன்றியம், வாரியாக தேர்வு செய்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கூறினார். அதற்கான விண்ணப்ப படிவம் திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ் புதூர் ஆகிய ஒன்றியங்களில் வழங்கப்படும் என்றும், சிபாரிசு அடிப்படையில் இல்லாமால் திறமையின் அடிப்படையிலேயே இளைஞர்களை தேர்வு செய்யபட வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய மாவட்ட செயலாளர் வரும் ஆண்டு தொடக்கத்திலேயே நாம் தேர்தலை சந்திக்க இருப்பதால் இப்போதிருந்தே அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கட்சித் தலைமையின் வழிகாட்டுதல்படி நாம் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என்றும் கூறினார். அதன் தொடர்ச்சியாக கழக செய்தி தொடர்பாளர் பேசும்போது இக்காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு உலக அளவில் இந்தியாவில் தான் அனைத்து தரப்பினரும் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே காலத்திற்கேற்ப நாமும் நமது கொள்கைகளையும் ,செயல்பாடுகளையும், மக்களுக்கு கொண்டு செல்வது காலத்தின் கட்டாயமாக இருந்து வருகிறது அதன் அடிப்படையில் தற்போது தலைமை கேட்டுக்கொண்டிருந்த அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் திறமை மிக்க இளைஞர்களை ஈடுபடுத்துவது மிகவும் அவசியமாகும் என்றும் கூறினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ராமலிங்கம், சிங்கம்புனரி வாசு, எஸ்.புதூர் ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் இப்ராஹீம் ஷா, மாவட்ட கவுன்சிலர் பொன் பாஸ்கர், பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம், பிரேம்குமார், மாவட்ட பிரதிநிதி ஜவகர் சிவா, இளைஞர் அணி நாகராஜ் ,வழக்கறிஞர் ராஜசேகரன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − = 10