ஆலங்குடி தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் பட்டினிப்போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. பள்ளி எப்போது திறப்பது என்பது கேள்வி குறியாக உள்ளது. இந்நிலையில். நர்சரி, பிரைமரி, சி.பி.எஸ்.சி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் சங்கம் பொதுச்செயலாளர் மற்றும் தலைவர் வேண்டுகோளின்படி நேற்றுமுன்தினம் தமிழ்நாடு முழுவதும் அனைவரும் அவரவர் பள்ளிகளின் வளாகத்திலே பட்டினிப்போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம். புதுக்கோட்டை மாவட்டம் முனைவர் கே.ஆர் நந்தகுமார், பொதுச்செயலாளர் வழிகாட்டுதலின் பெயரில், நடைபெற்றது.

பட்னி போராட்டத்தில் இப்பள்ளியின் ஆசிரியர்கள், ஆசிரியைகள், வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற பட்னிப்போராடத்திற்கு தாளாளர் இளந்தென்றல் தலைமை வகித்தார். தனியார் பள்ளிகள் மாவட்டச் செயலாளர் மதியழகன் முன்னிலை வகித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஓட்டுநர்களும் சுமார் 100 நபர்கள் பள்ளி வளாகத்தில் பட்டினி போராட்டத்தில் கலந்துகொண்டு மாதம்தோறும் ரூபாய் 10,000 வழங்குவதற்கும் மற்றும் பள்ளியின்னுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பள்ளி வளாகத்தில் இந்த பட்டினிப்போராட்டமானது நடைபெற்றது.

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள், வாகன ஓட்டுநர்கள், நடத்துனர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கீழ்க்ககண்ட நிவாரணங்கள் வழங்க கோரிக்கை வைத்தனர்.

தமிழக அரசே, தமிழக அரசே தனியார் பள்ளி ஆசிரியர்களைக் காத்திடுங்கள். அனைவருக்கும் மாதம் ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும். வாகனங்களின் இன்சூரன்ஸ்சை ரத்து செய்யுங்கள், சாலை வரியை ரத்து செய்யுகள், நடப்பு ஆண்டு எப்.சி.யை இரத்துச் செய்து உத்திர விடுங்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை புதுப்பித்தல் ஆணையை ரத்து செய்து நிரந்தரமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 + = 82