தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு

தமிழகத்தில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நெல்லை, மதுரை, கோவை, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.க்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்ட எஸ்.பி.யாக சுஜித் குமார், கோவை மாவட்ட எஸ்.பி.யாக அற.அருளரசு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை -மணிவண்ணன், காஞ்சிபுரம் சண்முகப்பிரியா, திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக டி.ஜெயசந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சை- தேஷ்முக் சேகர், புதுக்கோட்டை பாலாஜி சரவணன், ஈரோடு தங்கதுரை, நாமக்கல் எஸ்.பி சக்தி கணேசன், கன்னியாகுமரி பத்ரி நாராயணன், கரூர் -பகலவன், திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.யாக ரவளி பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.அரவிந்த் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =