தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 46,105 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 82,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 4,163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 64 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,829 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 47 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 17 பேரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 7 = 3