ரேடியோ எப். எம். ஆர்.ஜே.,க்கள் பணி நீக்கம்

புதுடில்லி: அகில இந்திய வானொலியில் பணி புரிந்து வந்த ரேடியோ ஜாக்கிகள் 80 பேர் திடீர் என பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அகில இந்திய வானொலியின் சார்பில் எப் .எம் ரெயின்போ இயக்கப்பட்டு வந்தது. இதில் பகல் மற்றும் இரவு முழுவதும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் செய்திகள் மற்றும் பாலிவுட் பாடல்கள் பொது விழிப்புணர்வு, கல்வி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டு வந்தன. இந்த ரெயின்போ எப்.எம் 2001 ல் எப்.எம். கோல்டு என பெயரிடப்பட்டது. இந்த பணியில் ரேடியோ ஜாக்கிகளாக சுமார் 80 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரையில் மாத ஊதியம் பெற்று வந்தனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதற்கு முன்னதாக மார்ச் மாதம் கடைசி வாரங்களில் இந்த ஆர்.ஜேக்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த நிகழ்ச்சிகள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

ஆர்.ஜே வாக 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வந்த ஆஷிமாபிரகாஷ் தற்போது வேலை இழப்பு காரணமாக தான் கடுமையான பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும் ,நானும் மற்ற ஆர்ஜேக்களும் மார்ச் மாத சம்பளமாவது தருமாறு கோரிக்கை விடுத்தோம். ஆனால் எல்லா முயற்சிகளும் பயனற்றவையாக போய்விட்டது. ஆர்.ஜேக்கள் ஒரு போதும் சிறப்பாக நடத்தப்படவில்லை கடைசியாக வேலையில்இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1