தமிழகத்தில் இன்று 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், 4 ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையில் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 3,827 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,14,978 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் இன்று மட்டும் 3,793 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66,571 ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 − = 72