ஆதார் – பான் எண் இணைப்பு : அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு

ஆதார் பான் எண்ணை இணைப்பதற்கான தேதியை 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதையடுத்து பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது என எச்சரித்து இருந்தது.

வருமான வரியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக கால அவகாசம் வழங்கி, பல முறை கால நீட்டிப்பும் செய்தது. கடைசியாக பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31, 2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. மத்திய நேரடி வரி ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

மேலும் மார்ச் 31ம் தேதி பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படவில்லை என்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்களும் வெளியாகியது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மார்ச் மாதம் முதல் இருப்பதால் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரை நீட்டித்து வருவமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 3 = 2