அரியலூரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டு விழா

அரியலூரில் அரசு மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:அரியலூர் மாவட்டத்துக்கென, அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக, அரியலூர்- செந்துறை சாலையில், அரியலூர் தெற்கு கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான, 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அதில் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன், 347 கோடி ரூபாய் செலவில், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதி, மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்தும், செயல்படுத்தப்பட உள்ளது.

அடுத்த சில மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, அரசு சார்பில் ஆண்டு தோறும் 150 மருத்துவ மாணவ, மாணவிகள் சேர்க்கை நடத்தப்படவுள்ளது. அரியலூர் அரசு மருத்துவ கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா, ஏழாம் தேதி இன்று காலை அரியலூரில் நடைபெறுகிறது.

இதனை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி காணொளி காட்சி வாயிலாக தொடங்கிவைக்கிறார். அதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்களும், அரசுத்துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.

அதையொட்டி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ள இடத்தில் நடைபெறும் பூஜையில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா மற்றும் மாவட்ட அளவிலான அரசு அலுவலர்கள், அதிமுக மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளத

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 11 =