கோவை மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் 712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 275 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 435 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருடைய மகள், மருமகன், பேத்திக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியான நிலையில் தற்போது அர்ச்சுனனுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் மதுரை சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தற்போது ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அதிமுக, திமுகவில் தலா 4 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.