அரியலூரில் அதிமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்களை அரசின் தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வழங்கல்

அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் 8,550 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அரசின் தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வழங்கினார்.

அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில், திருமானூர், தா.பழூர் பகுதிகளை சேர்ந்த 8,550 குடும்பங்களுக்கு, கொரோனா நிவாரண பொருட்களை, அரசின் தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் வழங்கினார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர், தா.பழூர், ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில், அரியலூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற, கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொ. சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்லங்குறிச்சி பாஸ்கர் வரவேற்றார்.

அதிமுக ஒன்றிய செயலாளர்கள், திருமானூர் கிழக்கு வடிவழகன், திருமானூர் மேற்கு குமரவேல், திருமானூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் விஜய பார்த்திபன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருமானூர் நகரம், எஸ்.ஆர்.நகர், காந்திநகர், மேல வரப்பங்குறிச்சி, நதியனூர், மேலராமநல்லூர், காமரசவல்லி, தெற்கு தேளூர், தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மழவராயநல்லூர், கோவில் சீமை, கடம்பூர், அறக்கட்டளை, குணமங்கலம், கீழநத்தம், ஆலவாய், மனகெதி, வடகடல், வெண்மான் கொண்டான், ஆதிச்சனூர், நாச்சியார் பேட்டை, உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 8,550 குடும்பங்களுக்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட கொரோனா நிவாரண நலத்திட்ட பொருட்களை, அரசின் தலைமை கொறடா, அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை எஸ். ராஜேந்திரன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட கவுன்சிலர்கள் பாளையங்கரை ராஜேந்திரன், தனசெல்வி சக்திவேல், அதிமுக தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் அக்பர்ஷரிப் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 − 79 =