விருதுநகரில் டாஸ்மார்க் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலைமோதிய குடிமகன்களின் கூட்டம்

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் டாஸ்மார்க் கடைகளும் அடங்கும். ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதாலும் டாஸ்மார்க் கடைகள் அடைக்கப்படும் என்பதாலும் மது பிரியர்கள் நாளை தங்களுக்குத் தேவைப்படும் மதுபாட்டில்களை இன்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர் ஆனால் மது பிரியர்கள் மது என்றவுடன் சமூக இடைவெளியை கூட மறந்து தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 − = 41