திருப்பூர்: குழந்தையை குப்பை தொட்டியில் அமர வைத்து பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணியாற்றும் வடமாநில துப்புரவு பெண் தொழிலாளி

மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுஜா என்பவர் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார். இவரது 3 வயது மகள் பொட்டு வை விட்டு செல்ல இடம் இல்லாததால் குழந்தையை அழைத்துக் கொண்டு சுஜா துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளார்.

குப்பை தள்ளுவண்டி வாகனத்தில் குப்பை கூடையில் குழந்தையை அமர வைத்து எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சுஜா துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளது காண்போரை வியக்கவைத்துள்ளது. கொரோனா பரவல் காலத்திலும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்காமல் இருக்கும் மாநகராட்சியின் அவல நிலையை எடுத்துக் காட்டுவதாகவும் இது அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

59 − 53 =