தஞ்சை மாவட்டத்திற்கு நடப்பு ஆண்டு 8 ஆயிரம் கோடி இலக்கு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுப்பதை அதிகரிக்க வேண்டும் : வங்கியாளர்கள் கூட்டத்தில் தஞ்சை எம்பி பழநிமாணிக்கம் பேச்சு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கியாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் தஞ்சையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு எம்பி பழநிமாணிக்கம் தலைமை தாங்கினார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வங்கியின் செயல்பாடுகள், வங்கி கடன் இலக்குகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பின்னர் எம்பி பழநிமாணிக்கம் பேசும்போது காவிரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது கடை மடை வரை சென்றடைந்துள்ளது. ஆழ்குழாய் கிணறு வைத்திருக்கும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். இதர விவசாயிகள் சாகுபடிக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருசில வங்கிகள் விவசாய கடன்களை அதிகமாக வழங்கவில்லை. விவசாயிகளுக்கு பயிர்கடன்களை அதிகமாக வழங்கினால் தான் விவசாயிகள் பயனடைய முடியும் எனவே பயிர்க்கடன் அதிகமாக வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே விவசாயிகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலுக்கு கடன் வழங்க தஞ்சை மாவட்டத்திற்கு 8 ஆயிரம் கோடி இலக்கு என்பதை அதிகப்படுத்தி இருக்கலாம் எனவே வங்கிகள் விவசாய கடனை அதிக அளவில் கொடுத்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்,கூட்டுறவு வங்கிகளின் மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நபார்டு வங்கி பாலமுருகன் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 62 = 63