ஜூலை 6 முதல் அனைத்து வழக்குளும் விசாரிக்கப்படும் – சென்னை உயர்நீதிமன்றம்!

ஊரடங்கு காலத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்பட்ட நிலையில், ஜுலை 6 ஆம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், அனைத்து வழக்குகளையும் காணொலி மூலம் விசாரிக்க உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வரும் 6ம் தேதி முதல் அனைத்து நீதிபதிகளும், புதிய மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது எனவும், காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, இரு நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளும், 27 தனி நீதிபதிகளும், ஜூலை 6ம் தேதி முதல் வழக்கமான நடைமுறைப்படி வழக்குகளை விசாரிக்க உள்ளனர்.

இதேபோல், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு நீதிபதிகளை கொண்ட இரண்டு அமர்வும், 9 தனி நீதிபதிகளும் வழக்குகளை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 + = 53