சென்னையில் ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் : தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்கிறது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சென்னைக்கு ஜூலை 6 முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளை அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம். டீக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.

உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி. தொலைபேசியில் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைக்கு இரவு 9 மணி வரை அனுமதி. வணிக வளாகங்கள் தவிர அனைத்து ஷோரூம்கள், ஜவுளி, நகைக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை செயல்படலாம். மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + = 13