சாத்தான்குளம் சி.சி.டி.வி. காட்சிகள் அழிப்பு : மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரம் – ஜஜி சங்கர்

சாத்தான்குளம் வழக்கில் அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சிபிசிஐடி ஜஜி.சங்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் குறித்து விசாரித்து வரும் சிபிசிஐடி ஜஜி சங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சாத்தான்குளம் சம்பவத்தில் சிறையில் அடைக்கபட்டவர்களை அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைதாகிய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்,2 எஸ்.ஐ. 2 காவலர்கள் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மேலும் யாருக்கும் தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அழிக்கப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகளை மீட்டு எடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − = 63