ஏம்பல் கிராமத்தில் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்

ஆவுடையார்கோவில் அருகே 7 வயது சிறுமியை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து சடலத்தை ஊரணியில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று சிறுமி ஜெயப்பிரியாவின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் நேற்று காலை 10 மணி அளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மூலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் அறிவித்த 5 லட்சம் மற்றும் 4 லட்சம் சேர்த்து 9 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி சிறுமியின் பெற்றோர்களிடம் வழங்கினார்.

பின்னர் சிறுமி ஜெயபிரியா உடல் சொந்த ஊரான ஏம்பல் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. பின்னர் திமுக கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் ரகுபதி, முன்னாள் எம்எல்ஏ. உதயம் சண்முகம், ஆவுடையார்கோவில் சேர்மன் உமாமகேஸ்வரி, மணமேல்குடி சேர்மன் இரா.கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டு சிறுமியின் குடும்பத்திற்கு திமுக தலைமையின் ஆணைக்கு இணங்க ரூ 5 லட்சம் பணமாக வழங்கினர்.

சிறுமி ஜெயப்பிரியாவை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த கொலை குற்றவாளி பூக்கடை ராஜாவை போக்சோ சட்டம் மற்றும் Sc STசட்டப்படி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவருடன் பாலியல் கூட்டுவன்புணர்வில் ஈடுபட்ட அதே உரைச் சேர்ந்த மேலும் இருவர் சேர்ந்திருக்கலாம் என்கிற கோணத்தில் இருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 61 = 71