ஊத்தங்கரையில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் மற்றும் குளிரூட்டும் நிலையம் அதிகாரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கெங்கப்பிராம்பட்டியில் இயங்கிவரும் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் மற்றும் கொள்முதல் நிலையங்களை ஆவின் சென்னை நோடார் அலுவலர் ஜெயச்சந்திரன், கிருஷ்ணகிரி பொது மேலாளர், துணைப்பதிவாளர் ஆகியோர் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது பால் கொள்முதல் செய்யப்படும் நிலையங்களில் பாலின் தரம் குறித்தும், தரமான பால் கொள்முதல் செய்யப்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குளிரூட்டும் நிலையங்கள் சரியான முறையில் இயங்கி வருகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இதில் ஆவின் பால் கொள்முதல் நிலைய அலுவலர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1