இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இதுவரை இல்லாத அளவில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் இதுவரை 6,48,315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 442 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,655 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 394227 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 235433 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,92,990 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 102721 பேருக்கும், டெல்லியில் 94695 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

38 − = 33