மானாமதுரையில் நில மோசடி கும்பல் மீது வழக்குப்பதிவு

மானாமதுரையில் கொரோனா முழு அடைப்பை பயன்படுத்தி நில மோசடி செய்து, சுமார் ஐந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகப் பெரிய நில மோசடி கும்பலை சேர்ந்தவராக கூறப்படும் ராமநாதபுரம் மாவட்டம் இடையர் குடியிருப்பை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையை சேர்ந்த சிவராமன் ஆகியோர் மோசடி ஆவணங்களை தயார் செய்து மானாமதுரை ஏரியாவில் உள்ள பல ஏக்கர் நிலங்களை அபகரித்து வருவதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மானாமதுரையில் இவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தும், மானாமதுரை நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். ஆனால் மானாமதுரை போலீசார் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பாதிக்கபட்டவர்களின் குற்றச்சாட்டு . இந்நிலையில் இதே போல் மோசடி செய்து காரைக்குடியில் வசிக்கும் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான தெற்கு சாந்தநூர் மானாமதுரையில் உள்ள நிலங்களை அபகரித்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி கடத்தியும் மேற்படி இடங்களை மற்றவர்களுக்கு விற்க முயற்சித்தும் குவாரி பெர்மிட் வாங்குவதற்கும் முயன்றுள்ளர். அதன் பின்பு தக்க ஆதாரங்களுடன் பாஸ்கரன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் செய்ததையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு (FIR No. 498/2020) செய்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − 63 =