மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ.மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.80 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் அமைக்க பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அம்மன் கோவில்பதியில் உள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் சிமெண்ட் தளம் அமைக்க ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் என்.மனோரஞ்சிதம் நாகராஜ் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் தொடங்கவுள்ள பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் என்.மனோரஞ்சிதம் நாகராஜ் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அண்ணா தொழிற் சங்க தலைவர் வழக்கறிஞர் கே.நாகராஜ், ஒன்றியக் குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, வெங்கட்ராம கனேஷ், உதவி பொறியாளர் சாஸ்தா, ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணம்மா, சென்ராயன் மாவட்ட கவுன்சிலர் கதிரவன், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணை தலைவர் கிருஷ்ணன், கூட்டுறவு சங்க தலைவர் சக்தி, ஊராட்சி செயலாளர் பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவராஜ், சின்னப்பா நடராஜன், துரை கோவிந்தராஜ், மீனவர் அணி முனுசாமி, மனோஜ், ஒப்பந்ததாரர் கேசவன், குன்னத்தூர் பெருமாள், சென்னையன், சேட்டுகுமார், முன்னாள் கவுன்சிலர் கண்ணன், முருகேசன், கிளை செயலாளர் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் சிவாஜி உள்பட ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 − = 70