தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது – பலி எண்ணிக்கை 1,385 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டிய நிலையில் பலி எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில் தற்போது இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பானது 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 64 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதனால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,385 ஆக அதிகரித்துள்ளது. 58,378 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 42,955 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரே நாளில் 2,357 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்படுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொறுத்தவரை இன்று மேலும் 2,082 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால் சென்னையில் மட்டும் 64,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 + = 77