ஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை – திமுக சார்பில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கல்

ஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் திமுக சார்பில் ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகில் உள்ள ஏம்பலில் 7 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் அந்த படுபாதக செயலை கண்டித்ததோடு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

பின்னர் உடனே புதுக்கோட்டை மாவட்ட கழக பொறுப்பாளர் எஸ்.ரகுபதி தலைமையில் விரைந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததோடு ரூ.5,00,000 நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது.

மேலும் இதில் அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம், மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன், பொன்.ராமலிங்கம், அரிமளம் ஒன்றிய பெருந்தலைவர் மேகலா முத்து, பொன்துரை, பொன்.கணேசன், சக்தி ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் கலைவாணி சுப்ரமணியன், சுப்ரமணியன், இளையராஜா, கவுன்சிலர் கணேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 + = 50