ஊத்தங்கரையில் காவலர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பது குறித்து பயிற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வளாகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

பயிற்சியில் மருத்துவர் சதீஷ் காவலர்களுக்கு கொரோனா நோய் தொற்று எவ்வாறு பரவுகிறது அதை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து செயல் விளக்கம் மூலம் பயிற்சியளித்தார்.

இதில் முகக்கவசம் எவ்வாறு அணிய வேண்டும், அதை எவ்வாறு கழட்ட வேண்டும், கையுறைகளை எவ்வாறு அனிவது, அதை எப்படி கழட்டுவது மற்றும் கை கழுவும் முறை பற்றியும் செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தார்.

மேலும் அனைத்து காவலர்களுக்கும் உங்கள் முன் நிற்கும் அனைவரும் கொரோனா நோயாளி என என்ன வேண்டும், அப்போது தான் அனைத்து வழிமுறைகளையும் நீங்கள் கடைப்பிடிக்க முடியும், அப்படி நினைத்து செயல்பட்டால் தான் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும் என கூறினார். இதில் மருத்துவ அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 − = 20