இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து உத்தரவு

இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகயில் இந்தியாவில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தியாவில் உள்நாட்டு விமானங்கள் கடுமையான பாதுகாப்பு மற்றும் சமூக வழிகாட்டுதல் விதிமுறையின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக, சர்வதேச விமான சேவைக்கு ஜூலை 31 வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச விமான சேவைக்கு ஜூலை மாதம் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவு சர்வதேச சரக்கு விமானச் சேவைக்கும், சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமான சேவைக்கும் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

76 − 74 =