ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆழ்வார் திருநட்சத்திரவிழா

பெருமாளுக்கே பல்லாண்டு பாடியவரும், ஆண்டாளின் வளர்ப்பு தகப்பனாருமாகிய பெரியாழ்வாரின் திருநட்சத்திரவிழா ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்தது.

இதை முன்னிட்டு நேற்று காலை பெரியாழ்வார் உற்சவவிக்கிரகம் ரெங்கநாதர் சன்னதிக்கும், தாயார் சன்னதிக்கும் கொண்டுவரப்பட்டு ராமானுஜர் காட்டிய வழியில் மங்களா சாசனம் எனும் சிறப்பு வழிபாடு நடந்தது.

அப்போது பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் நலமுடன் இருக்கவும் சிறப்பு பிரார்தனைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சிகளை கோயில் அர்ச்சகர்கர்கள், கைங்கர்யபரர்கள் நடத்தினர்.

ஊரடங்கு காரணமாக பக்தர்கள் பங்கேற்க முடியாதநிலையிலும் ஆழ்வார் திருநட்சத்திர நிகழ்வுகள் முறைப்படி நடந்தன. ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 5 =