விருதுநகரில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடைபெற்ற உபசார விழா – கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அரசு அதிகாரிகள்

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நடைபெற்ற பிரிவு உபசார விழாவினால், கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அரசு அதிகாரிகள் உள்ளனர்.

விருதுநகர் மகளிர் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனர்/இணை இயக்குனர் ஆக பணிபுரிந்து வருபவர் தெய்வேந்திரன். இவர் 2018 ஆம் ஆண்டு ஜனவரி நான்காம் தேதி விருதுநகரின் மகளிர் திட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குனராக பணியில் சேர்ந்தார். இரண்டரை ஆண்டுகாலம் விருதுநகரில் பணிபுரிந்து வந்தவர் தற்போது பணி மாறுதல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவருக்கு இன்று விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அனைத்து உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் வட்டார இயக்க மேலாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தற்போது விருதுநகர் மாவட்டத்தை பொருத்தவரை கொரோனா தொற்று என்பது தினமும் வெகு விரைவாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. விருதுநகரில் மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்நிலையில் ஒரே அறையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கூடியிருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசு அறிவித்த ஊரடங்கு தற்போது அமலில் உள்ள நிலையில் நான்கு பேருக்கு மேல் கூட்டமாக நிற்க கூடாது என்ற நிலையில் ஒரே அறையில் 50க்கும் மேற்பட்டோர் பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டது தொற்று ஏற்பட பெரும் வாய்ப்பாக அமையும் எனவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிகாரிகள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு செல்லும் சாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து அந்த சாலை முழுவதும் முற்றிலும் மூடப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 1 =