வருவாய்த்துறையின் மூலம் 181 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்

தேவகோட்டை மற்றும் காரைக்குடியில் வருவாய்த்துறையின் மூலம் 181 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை மற்றும் காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று (30.06.2020) வருவாய்த்துறையின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தெரிவிக்கையில்:- தமிழ்நாடு முதலமைச்சர் வறுமையிலுள்ள ஏழை, எளியோர் ஏற்றம் பெற எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார்.

குறிப்பாக, மகளிர் தனிநபர் பொருளாதாரத்திற்கு சுயஉதவிக் குழுக்கள் மூலம் எண்ணற்ற திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு மானியத் திட்டங்கள் வழங்கப்பட்டு விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தலைவராகத் திகழ்ந்து வருகிறார். குறிப்பாக, ஒவ்வொரு விவசாயிகள் மனதிலும், தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து நாயகனாக இருந்து வருகிறார். அந்த அளவிற்கு ஒவ்வொரு திட்டத்திற்கும் சிறப்புக் கவனம் எடுத்து சிறந்த முதல்வராக தமிழகம் முழுவதும் இருந்து வருகிறார்.

இன்று தேவகோட்டை வட்டத்தில் பொதுமக்களிடம் மக்கள் தொடர்பு முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் தலா 3 சென்ட் வீதம் 52 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும், 17 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும், 7 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு விபத்து நிவாரணத் தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகைக்கான ஆணைகளையும், 7 பயனாளிகளுக்கு இயற்கை மரண நிவாரணத் தொகைக்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு தற்காலிகமாக வேலை செய்ய இயலாத நபர்களுக்கான மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளையும் என மொத்தம் 90 பயனாளிகளுக்கு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து, காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 22 பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும், 27 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகைக்கான ஆணைகளையும், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகைக்கான ஆணைகளையும், 4 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகைக்கான ஆணைகளையும், 19 பயனாளிகளுக்கு இயற்கை மரண நிவாரணத் தொகைக்கான ஆணைகளையும், 2 மூன்றாம் பாலினத்தோர் பயனாளிகளுக்கு உதவித் தொகைக்கான ஆணைகளையும், 7 பயனாளிகளுக்கு தலா 3 சென்ட் வீதம் விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்களையும் என ஆக மொத்தம் 181 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் அசோகன், வட்டாட்சியர்கள் மேசையாதாஸ் (தேவகோட்டை), தனி வட்டாட்சியர் பாலகுரு, பாலாஜி (காரைக்குடி), தனி வட்டாட்சியர் தங்கமணி, கூட்டுறவு பண்டகச்சாலை துணைத்தலைவர் மெய்யப்பன், கூட்டுறவு வங்கித்தலைவர் சேவியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 1 =